குடும்ப அட்டைக்கு இலவசமாக கபசுர குடிநீர் பாக்கெட்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இது மாநில அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது எனக் கூறினர்.

By : Thangavelu
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் இலவசமாக கபசுர குடிநீர் பாக்கெட்டுகளை வழங்ககோரிய விண்ணபத்தை பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சித்தா மருந்தான கபசுர குடிநீர் பாக்கெட்களை தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று, திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இது மாநில அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது எனக் கூறினர்.
மேலும், கபசுர குடிநீரின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறி, மனுதாரரின் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவுபிறப்பித்து வழக்கை முடித்து வைத்தனர்.
