Kathir News
Begin typing your search above and press return to search.

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.!

இது கல்லணைக் கால்வாய் வழியாக ஓடி, வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் வழியாக பாய்ந்து தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடையை சென்றடையும்.

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2021 8:03 AM IST

டெல்டா விவசாய பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் முக்கொம்பு வழியாக இன்று கல்லணையை சென்று சேர்ந்தது. இந்தத் தண்ணீர் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து இன்று திறந்துவிடப்படுகிறது.

இது கல்லணைக் கால்வாய் வழியாக ஓடி, வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் வழியாக பாய்ந்து தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடையை சென்றடையும். கல்லணையில் திறக்கப்படும் நீரால் காவிரி வடிகால் பகுதிகளில் அமைந்துள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அறுவடை நடைபெற உள்ளது.





மேலும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 90 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக 16,05,000 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெற உள்ளது. இந்த அணை திறப்பில் தமிழக அமைச்சர்கள் சிலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News