இந்த மாவட்டத்தில் மட்டும் தீவிர கட்டுப்பாடு.. அதிரடி உத்தரவு பிறப்பித்த ஆட்சியர்.!
கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், மீண்டும் 2வது அலை உருவாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், மீண்டும் 2வது அலை உருவாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கொரோனா தொற்றால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இது மனித உலகையே மிகவும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் ஒரு கொடிய நோய் ஆகும். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு இன்னும் மறையவில்லை. ஒரு சில மாநிலங்களில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் 100 என்ற எண்ணிக்கையை மீண்டும் தொட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 2 நாட்களாக 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
மேலும் குன்றத்தூரில் 3 பேருக்கு மேல் கொரோனா பாதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும். பரவலை பொறுத்து தீவிர கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.