Kathir News
Begin typing your search above and press return to search.

கன்னியாகுமரி: குளத்திற்குள் கார் மூழ்கியதில் தந்தை, மகள் உயிரிழப்பு.. மற்றொரு மகள் உயிருடன் மீட்பு.!

கார் கோணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள குளத்தில் பாய்ந்து மூழ்கியது. விபத்தை பார்த்த பொதுமக்கள் விரைந்து சென்று ஷாலினியை உயிருடன் மீட்டனர்.

கன்னியாகுமரி: குளத்திற்குள் கார் மூழ்கியதில் தந்தை, மகள் உயிரிழப்பு.. மற்றொரு மகள் உயிருடன் மீட்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  21 Jun 2021 6:21 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஒரு ஆம்னி கார் குளத்திற்குள் மூழ்கிய விபத்தில், தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

சிதறால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகள்கள் ஷாமிலி, ஷாலினியுடன் ஆம்னி காரில் ஈத்தாமொழி அருகே உள்ள ஒரு கோயிலுக்கு சென்றனர். அப்போது கார் கோணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள குளத்தில் பாய்ந்து மூழ்கியது. விபத்தை பார்த்த பொதுமக்கள் விரைந்து சென்று ஷாலினியை உயிருடன் மீட்டனர்.




அதற்குள் கார் முழுவதும் குளத்திற்குள் மூழ்கியது. இதனால் மீட்க முடியாததால் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், காரை கயிற்றால் கட்டி மேலே கொண்டு வந்தனர். இதனிடையே காரில் சிக்கிக்கொண்ட ராஜேந்திரன் மற்றும் மகள் ஷாமிலியும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். தந்தை, மகளும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News