வெளியில் இருந்து பார்த்தால் 'சர்ச்'.. உள்ளே போனால் விபச்சாரம்.. கன்னியாகுமரியில் போதகர் உட்பட 5 பேர் கைது.!
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே உள்ளது எஸ்டி மங்காடு. இந்த பகுதியை சேர்ந்தவர் லால் ஷைன் சிங் 40, இவர் ஒரு மதபோதகர் என்று கூறப்படுகிறது.

By : Thangavelu
வீட்டிலேயே சர்ச் நடத்தி பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கிறிஸ்தவ மத போதகர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே உள்ளது எஸ்டி மங்காடு. இந்த பகுதியை சேர்ந்தவர் லால் ஷைன் சிங் 40, இவர் ஒரு மதபோதகர் என்று கூறப்படுகிறது.
இவரது வீட்டில் பெடரல் சர்ச் ஆப் இந்திய என்று பெயர் வைத்துக் கொண்டு பிரார்த்தனை மையமாக நடத்தி வந்துள்ளார். அங்கு இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் அதிகளவு செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து அந்த வீட்டில் போலீசார் அதிரடியான சோதனை நடத்தினர்.
அப்போது லால் ஷைன்சிங் மற்றும் ஷைன் 34, ஷிபின் 34, ராணி 55, சுகந்தி 40 என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றும் 19 வயதுகுட்பட்ட இரண்டு பெண்களை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், 19 வயதுடைய ஒரு பெண்ணை தனது தாயே விபச்சாரத்தில் தள்ளியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நித்திரவிளை போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: தினமலர்
