ஆமை வேகத்தில் நடைபெறும் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருப்பணி - இப்படியே போனால் கும்பாபிஷேகம் எப்பொழுது பக்தர்கள் கவலை!
By : Thangavelu
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இரண்டு மாதம் மட்டுமே இருக்கின்ற நிலையில், ஆமை வேகத்தில் நடைபெறும் திருப்பணியால் கும்பாபிஷேகம் நடைபெறுவது கேள்விக்குறியாக இருப்பதாக பக்தர்கள் தற்போது கேள்வி எழுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலில் ஒன்றாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் இருக்கிறது. அங்கு 108 வைணவ திருத்தலங்களுள் ஒன்றான இக்கோயிலில் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேவபிரசன்னத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஜூலை மாதம் 6ம் தேதியில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளது.
எனவே கும்பாபிஷேக தொடக்க விழா ஜூன் மாதம் 29ம் தேதி துவங்க இருக்கிறது. இதனால் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இரண்டு மாதம் மட்டுமே இருக்கின்ற நிலையில், விரைவாக கோயில் திருப்பணிகளை நடத்தாமல் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே அதிகப்படியான ஆட்களை நியமித்து திருப்பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu