திருவிழாக்கள் நடத்த அனுமதி வேண்டும்: கிராமிய கலைஞர்கள் மனு.!
கன்னியாகுமரி மாவட்ட கிராமிய கலைஞர்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், கோயில் திருவிழாக்களை தடை செய்வது மூலம் தங்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்படுகிறது.

By : Thangavelu
தமிழகம் ழுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், கடந்த 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.
இந்நிலையில், கோயில் திருவிழாக்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென கிராமிய கலைஞர்கள் கன்னியாகுமரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். கொரோனா தடை உத்தரவு காரணமாக பெரிய மற்றும் சிறிய கோயில்களில் திருவிழா நடத்துவதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட கிராமிய கலைஞர்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், கோயில் திருவிழாக்களை தடை செய்வது மூலம் தங்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்படுகிறது.
எனவே பெரிய கோயில்களை தவிர்த்து சிறிய கோயில்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு அரசு அனுமதி வழங்கி கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தங்களது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
