ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ மல்லிகை ரூ.800!
நாடு முழுவதும் ஆயுதபூஜை கொண்டாடப்படும் நிலையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் செயல்பட்டு வரும் மலர் சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 60 டன் பூக்கள் விற்பனைக்காக வந்துள்ளது.
By : Thangavelu
நாடு முழுவதும் ஆயுதபூஜை கொண்டாடப்படும் நிலையில், பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் செயல்பட்டு வரும் மலர் சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 60 டன் பூக்கள் விற்பனைக்காக வந்துள்ளது.
சில நாட்களாக பெய்து வரும் மழையால் பூக்களின் வரத்து அதிகரித்த போதிலும், நாளை (அக்டோபர் 14) ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படுவதால் சிறு வியாபாரிகள் அதிகளவிலான மலர்களை வாங்கி செல்கின்றனர்.
இதன் காரணமாக அனைத்து வகையிலான பூக்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ தறபோது 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போன்று பிச்சிப்பூ 400 ரூபாயில் இருந்து 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 100க்கு விற்கப்பட்ட செவ்வந்தி தற்போது 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரோஜா தற்போது 280 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை விட தற்போது 10 மடங்கு பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Source: Dinakaran
Image Courtesy:DT Next