குமரியில் நீடிக்கும் கனமழை.. பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி, 1,756 கனஅடி நீர் வெறியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By : Thangavelu

கடந்த ஒரு சில நாட்களாக குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழை நேற்று வரை கனமழை பெய்தது. இதன் பின்னர் பகல் நேரங்களில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,929 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், நீர் மட்டம் 43.76 அடியாக உள்ளது.
அணையில் இருந்து 475 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், உபரியாக 1,281 கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டது. மொத்தம் 1,756 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.