கன்னியாகுமரி அருகே சாலையில் திடீர் விரிசல்.. குழிக்குள் விழுந்த பணியாளர்கள்.!
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே ஆற்றூர் அருமனை சாலையில் தேமானூர் பகுதியில் பாலம் முகப்பு சாலையில் பக்கசுவர் கட்டும் பணி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நடைபெற்றது.
By : Thangavelu
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே ஆற்றூர் அருமனை சாலையில் தேமானூர் பகுதியில் பாலம் முகப்பு சாலையில் பக்கசுவர் கட்டும் பணி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நடைபெற்றது.
இந்நிலையில், பக்கசுவர் கட்டுவதற்காக மண் எடுக்கும் பணியில் ஜேசிபி இயந்திர உதவியோடு, பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அந்த பணியை தக்கலை நெடுஞ்சாலைதுறை உதவி கோட்டபொறியாளர் ஜெகன் செல்வராஜன் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டது.
இதில் உதவி கோட்டபொறியாளர் ஜெகன்செல்வராஜன், குட்டைக்குழி பகுதியை சேர்ந்த சாலை பணியாளர்கள் மற்றும் ஜேசிபி உதவியாளர் கணேசன் உள்ளிட்டோர் மண்ணுக்குள் முழுவதுமாக புதைந்தனர். உடனே துரிதமாக செயல்பட்ட ஜேசிபி ஆப்பரேட்டர் இடிந்து விழுந்த மண்ணை உடனடியாக அப்புறப்படுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதமின்றி மூன்று பேர் தப்பினர்.
இதனிடையே லேசான காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக திருவட்டார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.