Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து வழிபாட்டை கொச்சைப்படுத்தி பேசிய கிருஸ்துவ ஆசிரியை - வெளிவரும் பகீர் உண்மைகள்

இந்து வழிபாட்டை கொச்சைப்படுத்தி பேசிய  கிருஸ்துவ ஆசிரியை - வெளிவரும் பகீர் உண்மைகள்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 April 2022 7:46 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பு நேரத்தில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்து மதமாற்ற முயற்சி நடப்பதாக புகார் எழுந்தது.

அந்தப் பள்ளியில் தையல் ஆசிரியையான பியாட்றிஸ் தங்கம், கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக, 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி புகார் அளித்தார்.மாணவியின் பெற்றோர், இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வகுப்பு நேரத்தில் பாடம் நடத்தாமல் மதமாற்ற முயற்சி நடப்பதை மாணவி வீடியோ வடிவில் புகராக கூறினார்.

அரசு பள்ளியில் மதமாற்ற முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் மற்றும் பெற்றோர்கள் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர். கண்ணாட்டுவிளை அரசு பள்ளி நிர்வாகம் மற்றும் புகாருக்குள்ளான தையல் ஆசிரியை பியாட்றிஸ் தங்கத்திடம் விசாரணை நடத்தி, துறைரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தக்கலை கல்வி மாவட்ட அலுவலர் எம்பெருமாள் தலைமையிலான குழுவினர், கண்ணாட்டுவிளை அரசு பள்ளிக்கு சென்று மாணவி மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இச்சம்பவம் உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து, மாணவிகளிடம் மதமாற்ற முயற்சி மேற்கொண்ட ஆசிரியை பியாட்றிஸ் தங்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆசிரியை பியாட்றிஸ் தங்கம் நடந்து கொண்ட விதம் குறித்து மாணவி சாணக்கிய சேனலுக்கு பேட்டி அளித்தார். லீவு நாட்களில் கூட போதனை செய்ய வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டனர். கோவிலுக்கு செல்பவர்களையும், இந்து கடவுள்கலையும் கெட்ட வார்த்தையில் பேசி அசிங்கப்படுத்தியதாக மாணவி தெரிவித்துள்ளார். முழு வீடியோவை அடுத்து காணலாம்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News