பகவதி அம்மன் கோவிலில் நடந்த புதிய மாற்றம்... பெண்களுக்கு கொடுக்கப்படும் புது அங்கீகாரம்!
பகவதி அம்மன் கோயிலில் முதல்முறையாக தற்பொழுது பெண் ஓதுவர் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்.
By : Bharathi Latha
கன்னியாகுமாரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பகவதி அம்மன் கோவில் என்பது உலக பிரசித்தி பெற்றது. குறிப்பாக இந்தியாவில் இருந்து மட்டுமில்லாத பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் எந்த கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றார்கள். குறிப்பாக இந்த ஒரு கோவிலில் நான்கு வேளைகளும் தீபாதாரணை மற்றும் வழிபாட்டை விசேஷ சிறப்பம்சங்கள் நடைபெற்று வருகிறது. புரட்டாசி நவராத்திரி குழுவின் போது அம்மனுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறுகிறது. குறிப்பாக இந்த ஆராதனையில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பக்தி பாடல்கள் ஓதப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓதுவர் பாலசுப்பிரமணியன் என்பவர் பணி ஓய்வு காரணமாக தன்னுடைய பணியை நிறைவு செய்தார். அதன் பிறகு இந்த பகவதி அம்மன் கோவிலில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓதுவர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த நிலையில் தற்பொழுது பெண் ஓதுவர் ஒருவர் இந்து கோவிலுக்கு முதல் முறையாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருச்சி திருவானைக்கோவில் அருகே இருக்கும் திருமலை சிவன் உய்யகொண்டான் கோவிலில் பெண் ஓதுவராக பணியாற்றி வந்த, பிரசன்னா தேவி என்பவர் இந்த ஒரு கோவிலில் ஒருவராக தற்போது நியமிக்கப்பட்டு இருக்கிறார். எனவே பகவதி அம்மன் கோவிலில் முதல் முறையாக பெண் ஒருவர் என்ற பெருமையை பிரசன்னா தேவி பெற்று இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar