மெரினாவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் - மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?
சென்னை மெரினா கடற்கரை நடுவே அமைக்கப்படும் கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதி.
By : Bharathi Latha
சென்னை மெரினாவில் கடலின் நடுவில் அமைக்கப்பட உள்ள கருணாநிதியின் பேனா சின்னத்திற்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதியை வழங்கி உள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது. தமிழ் இலக்கியத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அளித்த பங்களிப்பினை நினைவு கூறும் வகையில் கடலில் நடுவில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி பயன்படுத்திய பேனா போன்று ராட்ச சபைநாவின் வான் நோக்கி செங்குத்தாக நிறுத்தப்படுகிறது. ₹ 80 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.
இந்த நினைவுச் சின்னம் கடல் மட்டத்தில் இருந்து 42 கிலோமீட்டர் தூரத்தில் அமைய இருக்கிறது இது கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை விட சற்று உயரமானதாக இருக்கும். பேனா நினைவு இடம் சின்னத்திற்கு செல்வதற்கு மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் பின்புறத்தில் இருந்து தரைத்தளத்தின் கடல் மட்டத்தில் 650 மீட்டர் நீளத்தில் 7 மீட்டர் அகலத்தில் இரும்பு பாலத்தில் கண்ணாடியிலான பாதை அமைக்கப்படுகிறது. இதில் ஏராளமான பார்வையாளர்களை ஏற்று செல்வதற்கு சிறிய ரக வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை எடுத்து சின்னம் அமைப்பதற்கு நிபந்தனைக் குழுடன் கூடிய அனுமதியை தமிழக அரசுக்கு மத்திய அரசின் மதிப்பீட்டு குழு வழங்கி உள்ளது. அதன்படி சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தின் படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பேரிடர் மேலாண்மை திட்டத்தின் படி இடர் மதிப்பீட்டு அருகில் பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்பு மற்றும் அந்த திட்டம் தொடர்பாக பிற ஆவணங்களை மாநில அரசு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Indian Express News