Kathir News
Begin typing your search above and press return to search.

காருண்யா ஐடி ரெய்டு- விவசாய போராட்டத்திற்கு உதவுவது போல் மத மாற்றத்துக்கு நிதி வசூல்.?

கனடாவில் இருக்கும் சீக்கியர்கள் மூலம் விவசாயிகளுக்கு நிதி திரட்டுவது போல் இந்தியாவிற்குள் பணத்தைக் கொண்டு வந்ததாக சந்தேகம்

காருண்யா ஐடி ரெய்டு- விவசாய போராட்டத்திற்கு உதவுவது போல் மத மாற்றத்துக்கு நிதி வசூல்.?
X

Shiva VBy : Shiva V

  |  10 Feb 2021 4:29 PM GMT

இந்தியாவில் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு பண உதவி செய்யும் சாக்கில் முறைகேடாக கனடாவிலிருந்து பணம் கொண்டு வர முயன்றதால் தான் மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் 'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் இயங்கும் மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான மத நிறுவனம் ஆகிவற்றுக்குச் சொந்தமான வருமான வரித் துறை அதிரடியாக சோதனை செய்தது. இதில் கணக்கில் காட்டப்படாத 5 கிலோ தங்கம் மற்றும் ₹120 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.

கனடாவில் வசித்து வரும் பால்தினகரனுக்கு இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது அவர் அலுவலகங்கள் மீது ஏன் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வருபவர்கள் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே. பஞ்சாபில் இருக்கும் பெரும்பாலானோர் கனடாவில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் மூலமாகவே வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் போலியான போர்வையில் இருக்கும் சில விவசாய சங்கங்களுக்கு நிதி கிடைத்து வருகிறது. இதே போல் இயேசு அழைக்கிறார் நிறுவனத்திற்கு கனடாவிலிருந்து முறைகேடாக விவசாயிகளுக்கு நிதி அளிக்கும் சாக்கில் முறைகேடான பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்று இந்திய அரசிற்கு தெரிய வந்ததும் அவர் நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப்பில் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் மத மாற்ற நிகழ்வுகளில் பால் தினகரனுக்கு பெரும் பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. முன்னர் பஞ்சாப்பில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவுபவர்களுக்கு பால் தினகரனின் அமைப்பு பணம் கொடுப்பதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயப் போராட்டத்துக்கு உதவுவது போல் மதமாற்ற செயல்பாடுகளுக்கு நிதி திரட்டி இந்தியாவுக்குள் கொண்டு வர முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News