Kathir News
Begin typing your search above and press return to search.

கரூர்: அணில்களிடமிருந்து மின் வயர்களை பாதுகாக்க மரங்களை வெட்டும் அவலம்.!

திமுகவை சேர்ந்தவரும் மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணம், அணில்கள்தான் என வெளிப்படையாக கூறினார். அதாவது மின் கம்பிகளில் அணில் ஓடி உராய்வு ஏற்படுகிறது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது எனக் கூறினார். இதனை கேட்ட பலரும் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவரவில்லை.

கரூர்: அணில்களிடமிருந்து மின் வயர்களை பாதுகாக்க மரங்களை வெட்டும் அவலம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  22 Jun 2021 7:37 PM IST

கரூரில் பல்வேறு இடங்களில் மரங்களை வெட்டும் பணிகளில் திமுக மற்றும் மின்சாரத்துறை ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவை சேர்ந்தவரும் மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணம், அணில்கள்தான் என வெளிப்படையாக கூறினார். அதாவது மின் கம்பிகளில் அணில் ஓடி உராய்வு ஏற்படுகிறது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது எனக் கூறினார். இதனை கேட்ட பலரும் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவரவில்லை.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் டிரஸ்ட் மூலமாக நகரங்களில் மரம் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன கருத்து உண்மையாக இருக்குமோ என்று எண்ணி, கரூர் மாவட்டத்தில் உள்ள பல மரங்களை திமுக துணையோடு மின்சாரத்துறையினர் வெட்டி சாய்த்து வருகின்றனர்.

இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் கால்புணர்ச்சியால் விஜயபாஸ்கர் நட்ட மரங்களை செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில்தான் வெட்டப்படுகிறது என அதிமுகவினர் வெளிப்படையாக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அணிலால் மின்சாரம் துண்டிப்பு ஏற்படுவதை சாமானிய மனிதரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் உயர்ந்து பதவிக்கு சென்ற ஒருவர் அணிலால்தான் மின்தடை ஏற்படுகிறது என்று கூறுவது மிகப்பெரிய வீழ்ச்சியை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News