தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா: அலட்சியமாக இருப்பதே காரணமா ?
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1,800க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
By : Bharathi Latha
கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்து வருவதை காணலாம். இது மக்களின் அலட்சிய செயல் காரணமாக இருக்குமா? என்பது போன்றும் சிந்திக்க வைக்கின்றது. ஏனென்றால் மக்கள் சுகாதார நடவடிக்கைகளை உரையாற்றுகையில் கடைபிடித்தால் மட்டுமே மூன்றாவது அலை நம்மால் நிச்சயம் தடுக்க முடியும்.
மக்கள் தங்களுடைய பாதுகாப்பும் உறுதி செய்வது மிகவும் அலட்சியமாக செயல்படுகிறார்கள். இதன் காரணமாக தான் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று 1,850 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,90,632ஆக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை டபுள் செஞ்சுரி அடித்து விட்டது.
கோவையில் இன்று 217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 205 பேருக்கும் உறுதியாகியுள்ளது. அதேபோல செங்கல்பட்டு ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100 தாண்டி உள்ளது. தமிழகத்தில் இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களின் அலட்சியமான செயல்களை தவிர்ப்பது நோய் தொற்று குறைப்பதற்கான ஒரு வழியாகும் என்று சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
Image courtesy:times of India