கேரளா தக்காளி காய்ச்சல் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கூறுவதென்ன?
கேரளாவில் புதிதாக உருவெடுத்துள்ள தக்காளி காய்ச்சல், தமிழக மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை.
By : Bharathi Latha
கேரளாவில் புதிய வைரஸ்களின் பிறப்பிடமாகவும் அமைந்துள்ளது எனக் கூறலாம். குறிப்பாக ஆரம்பத்தில் உருவான கொரோனா வைரஸ் முதல் மேலும் பறவைக்காய்ச்சல் வரை தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் தக்காளி காய்ச்சல் வரை அனைத்தையும் கொண்டுள்ள முதல் நோயாளி கேரளாவில் இருந்துதான் உருவாக்கப்படுகிறார்கள். அந்த வகையில் கேரளாவில் அருகில் அண்டை மாநிலமாக இருக்கும் தமிழகத்தின் இதுகுறித்து நிலைமை என்ன? என்று சுகாதாரத்துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்- தமிழக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதாரத்துறை செயலாளர் பேட்டியில் இவ்வாறு கூறினார்.
மேலும் இந்த வைரஸ் காய்ச்சலை பொறுத்தவரை தக்காளிக்கு இந்த காய்ச்சலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் அதிகமாக பரவி வரும் இந்த காய்ச்சலுக்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அம் மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் கேரளாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய கொல்லம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன. மேலும் அத்தகைய மாநிலங்கள் தற்போது தீவிர கட்டுப்பாட்டிலும் உள்ளது. கேரளாவில் இருந்து இது மற்ற மாநிலங்களுக்கு பரப்பக் கூடாது என்பதை அண்டை மாநில அரசுகளும் மிகவும் கவனமாக இருக்கிறது சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டு குணமான குழந்தைகளுக்கு இந்த நோய் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் இது பரவ வாய்ப்பு உள்ளது.
Input & Image courtesy:Malaimalar news