கோவையில் நடந்த குண்டு வீச்சு சம்பவம் - குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை!
கோவை குண்டு வீச்சு சம்பவம் காரணமாக அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு.
By : Bharathi Latha
கோவை பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களுக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள். குற்றவாளிகளை பிடிக்க தற்போது தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. கோவை புதூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்தார்கள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் அலுவலகமீது பெட்ரோல் குண்டு வீச்சு எரிந்துவிட்டு அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்கள். அதை போல் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மற்றும் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பாரதிய ஜனதா மண்டல தலைவர் மோகனுக்கு சொந்தமான கடையிலும் நேற்று இரவு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. அவை பெரிதாக வெடிக்காதுதால் இந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. இது குறித்த போலீஸ் அதிகாரிகள் கூறும் பொழுது கார்கள் ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் அகப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் பற்றி போலீசார்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு தற்போது ஏற்பட்டு உள்ளது.
Input & Image courtesy:Puthiyathalaimurai News