Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் ஒரே நேரத்தில் ஆட்சியர், எஸ்.பி, கமிஷனர் ரத்த தானம்.!

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு இன்று கோவை, அரசு மருத்துவமனையில் அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகரக் காவல் ஆணையர் தீபக் டாமோர், ஜஜி சுதாகர், மற்றும் எஸ்.பி., செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் ரத்ததானம் அளித்தனர்.

கோவையில் ஒரே நேரத்தில் ஆட்சியர், எஸ்.பி, கமிஷனர் ரத்த தானம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 Jun 2021 5:21 PM IST

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு இன்று கோவை, அரசு மருத்துவமனையில் அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகரக் காவல் ஆணையர் தீபக் டாமோர், ஜஜி சுதாகர், மற்றும் எஸ்.பி., செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் ரத்ததானம் அளித்தனர்.

ரத்ததானம் அளித்த பின்னர் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறும்போது: ஒரு வருடத்தில் ஆண்கள் 4 முறையும், பெண்கள் 3 முறையும் ரத்ததானம் செய்யலாம். விபத்தால் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு மற்றும் ரத்த தட்டு அணுக்கள் குறைபாடு உட்பட பல்வேறு நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றுவதற்கு ரத்ததானம் செய்வது மிகவும் அவசியம்.

எனவே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன்பாக ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்து கொண்டவர்கள் 3 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அதே போன்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 2 வாரங்கள் கழித்து ரத்தானம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News