Kathir News
Begin typing your search above and press return to search.

கனமழை எதிரொலி.. கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.!

கோவை, சிறுவாணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போன்று நொய்யலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சித்திரைச்சாவடி அணைத் தாண்டி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

கனமழை எதிரொலி.. கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  17 Jun 2021 2:23 PM IST

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை, சிறுவாணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போன்று நொய்யலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சித்திரைச்சாவடி அணைத் தாண்டி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

மேலும், வால்பாறை வட்டாரத்தில் இரண்டு நாட்களாக கனமழை நீடித்து வருவதால் வெள்ளமலை, இறைச்சிப்பாறை, சின்னக்கல்லாறு ஆகிய இடங்களில் உள்ள அருவிகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News