கோவையில் கொட்டித்தீர்த்த மழை: சாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி.!
கோவையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் மிதமான மழை பெய்தது.
By : Thangavelu
கோவையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த ஒரு சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று முதல் பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்துள்ளது.
இந்நிலையில், கோவையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. மேலும், நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் நகரில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
அதில் உக்கடம், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், ராமநாதபுரம், பீளமேடு, உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. பாலத்தின் அடியில் தேங்கிய தண்ணீரில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்றனர்.