கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: உடனடி நடவடிக்கை தேவை என மக்கள் புகார்!
நூறு ஆண்டுகள் பழமையான கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது அவற்றை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் புகார்.
By : Bharathi Latha
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் வார திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த குடியதுக்கும் கூட்டத்தில் மக்கள் தங்களுடைய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குறைகளை நேரடியாக மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கலாம்.
அந்த வகையில் தற்பொழுது பல்லடம் அருகே நாராயணபுரம் கள்ளம்பாளையம் ஆதிதிராவிடர் காலணியை சேர்ந்த மக்கள் அளித்த மனு தான் தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் தங்களுடைய மனுவில் கூறப்பட்டு கூறுகையில், எங்கள் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சுமார் 100 ஆண்டு பழமையான மதுரை வீரன் மற்றும் பட்டர் பட்டத்தரசி அம்மன் என்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகில் தான் உள்ளது. இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது மற்றும் இந்த கோவில் தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது.
இந்நிலையில் கள்ளம்பாளையத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கள் பயன்படுத்தி வந்த கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக இவர்கள் புகாரியில் தெரிவித்துள்ளார்கள். மேலும் எங்கள் பகுதியிலிருந்து கழிவு நீர் வெளியேற முடியாமல் கோவில் அருகே குட்டை போல் தேங்கி இருக்கிறது. ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்க வேண்டும் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுவை வைத்திருக்கிறார்கள். மேலும் எங்கள் பகுதியில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் முன் வைத்திருக்கிறார்கள்.
Input & Image courtesy: Thanthi News