கட்டுப்பாடு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட் சிறு வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்.!
கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கோயம்பேடு சிறு வியாபாரிகள் தகவல் கூறுகின்றனர்.
By : Thangavelu
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளை முதல் சில்லறை வியாபாரிகளுக்கு கோயம்பேட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சிறு வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதில் கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கோயம்பேடு சிறு வியாபாரிகள் தகவல் கூறுகின்றனர்.
மேலும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் இருக்க கடைகளை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு அனுமதி அளிக்காததால், கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்திற்கு அனுமதி அளிக்கும் வரையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.