கோயம்பேடு பஸ் நிலையம்: 2 பேர் தலைமறைவாக வைத்திருந்த சுவாமி சிலைகள் மீட்பு!
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரண்டு பேரிடம் தலைமுறைவாக வைக்கப்பட்டிருந்த உலக சுவாமி சிலைகள் மீட்கப்பட்டு இருக்கிறது.
By : Bharathi Latha
பஸ் நிலையம் அருகே இரண்டு சந்தேகப்படும்படி நபர்கள் இருந்து கொண்டு இருந்தார்கள். மேலும் அந்த இரண்டு நபர்கள் போலீஸ் வருவதை பார்த்து பயந்து நடுங்கி ஓடினார்களாம். இதன் காரணமாக சந்தேகம் அடைந்த போலீசார், அந்த இரண்டு நபர்களையும் பக்கத்தில் வர வைத்து விசாரணை நடத்தினார்கள். அதில் ஒரு நபர் போலீஸிடம் சிக்காமல் தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பின்தொடர்ந்து இரண்டு நபரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றது. அப்பொழுதுதான் தெரியவந்தது அவர்கள் இரண்டு சுவாமி உலக சிலைகளை வைத்திருப்பது.
சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்த நபர்களிடம் இரண்டு உலோக சுவாமி சிலைகள் இருப்பது கண்டறிந்து போது அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மேலும் அவர்கள் எங்கிருந்து இதை திருடினார்கள்? யாருக்கு இதை மாற்றுவதற்கு கொண்டு சென்றார்கள்? என்பது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு நபர்களில் ஒருவரை மட்டும்தான் போலீசாரால் பிடிக்க முடிந்தது. இன்னொரு நபர் தப்பி ஓடி விட்டார்.
இவர்கள் இருவரும் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது. கும்பகோணத்தை சேர்ந்த சுதாகர் தினேஷ் என்பவரும் கண்டறியப்பட்டுள்ளது. இரு நபர்கள் பற்றிய தகவல்களை தற்பொழுது போலீசார் செய்தது வருகிறார்கள். இதனை லால்குடியில் சேர்ந்து ஒரு பெண் இரண்டு உலக சிலைகளை கொடுத்து அவற்றை சென்னையில் இருக்கும் நபரிடம் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக மூன்று லட்சம் வாங்கி வரும்படி கூறியதாக தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார்.
Input & Image courtesy: Polimer News