தளி: ஒற்றை யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு.!
இன்று காலை மீண்டும் வீட்டிற்கு ஒத்தையடி பாதையில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை யானை குண்டப்பாவை தூக்கி வீசியுள்ளது. இதில் படுகாயமடைந்து கீழே விழுந்து கதறியுள்ளார். அப்போது மீண்டும் விடாத யானை அவரை காலால் மிதித்துள்ளது.

By : Thangavelu
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கிராமத்தில் ஒற்றை யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தளி அருகே உளிபண்டா என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர் குண்டப்பா 63, இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவர் நேற்று இரவு விவசாய நிலத்தில் உள்ள பயிர்களுக்கு பாதுகாப்பிற்காக சென்றுள்ளார்.
இதனிடையே இன்று காலை மீண்டும் வீட்டிற்கு ஒத்தையடி பாதையில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை யானை குண்டப்பாவை தூக்கி வீசியுள்ளது. இதில் படுகாயமடைந்து கீழே விழுந்து கதறியுள்ளார். அப்போது மீண்டும் விடாத யானை அவரை காலால் மிதித்துள்ளது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது பற்றிய தகவலை கிராம மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
