கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மின்தடை: வெண்டிலேட்டர் வேலை செய்யாததால் கொரோனா நோயாளி உயிரிழப்பு.!
நேற்று கொரோனா சிறப்பு வார்டின் கீழ் தளத்தில் மின்சாரம் திடிரென்று தடைபட்டுள்ளது. இதனால் வெண்டிலேட்டரின் பேட்டரி குறைந்துள்ளது. இதனையடுத்து வெண்டிலேட்டர் அளவு குறைவதாக பிரபுவின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். சில நிமிடங்களில் பிரபு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளார்.

By : Thangavelu
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக வெண்டிலெட்டர் வேலை செய்யாததால் கொரோனா நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள ஒபிலிகாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு 30, இவர் விவசாயி ஆவார். இதனிடையே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 14ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று கொரோனா சிறப்பு வார்டின் கீழ் தளத்தில் மின்சாரம் திடிரென்று தடைபட்டுள்ளது. இதனால் வெண்டிலேட்டரின் பேட்டரி குறைந்துள்ளது. இதனையடுத்து வெண்டிலேட்டர் அளவு குறைவதாக பிரபுவின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். சில நிமிடங்களில் பிரபு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளார்.
இதனால் பிரபுவை வேறு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் செல்லும்போதே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துக்கு மருத்துவமனை அலச்சியமே காரணமாக என பிரபுவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனால் மருத்துவமனை முன்பாக அமர்ந்து பிரபு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உறவினர்களிடம் சமாதானம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் போன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழந்து வருவது வேதனை அளிக்கிறது.
