Kathir News
Begin typing your search above and press return to search.

வெறும் 8 சென்டி மீட்டர் உயரம் கொண்ட மிக சிறிய, அழகிய கிருஷ்ணர் சிலை கடத்தல்காரர்களிடமிருந்து மீட்ப்பு !

வெறும் 8 சென்டி மீட்டர் உயரம் கொண்ட மிக சிறிய, அழகிய கிருஷ்ணர் சிலை கடத்தல்காரர்களிடமிருந்து  மீட்ப்பு !
X

DhivakarBy : Dhivakar

  |  25 Oct 2021 1:04 PM IST

8 சென்டி மீட்டர் உயரம் கொண்ட கிருஷ்ணர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்டுள்ளனர்.

மேல்மருவத்தூர் அருகே சித்தாம்பூர் சந்திப்பில், கடந்த 17ம் தேதியன்று மீனாட்சி அம்மன் சிலையை கடத்தல்காரர்களிடமிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டனர். பின்னர் அந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களில் கார்த்திக், சுந்தரமூர்த்தி, அப்துல் ரகுமான் மற்றும் மூர்த்தி ஆகிய 4 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தினர். இதில் சுந்தர மூர்த்தி என்பவர் 8 சென்டி மீட்டர் உயரமும், 155 கிராம் எடையும் கொண்ட கிருஷ்ணர் சிலையை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.




அவர் அளித்த தகவலின் பெயரில் மிகச்சிறிய தொன்மையான கிருஷ்ணர் சிலை மீட்கப்பட்டது.

இந்நிலையில் நான்கு கடத்தல்காரர்களிடம் மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

News J



Next Story
கதிர் தொகுப்பு
Trending News