கும்பகோணத்தில் காணாமல் போன சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் - அதிர்ச்சி தகவல்
52 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் திருடு போன சோழர்கால பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

By : Mohan Raj
52 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் திருடு போன சோழர்கால பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் தண்டத்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் 52 ஆண்டுகளுக்கு முன் திருடு போன 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 1971 ஆம் ஆண்டு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பார்வதி, நடராஜர், கோலு அம்மன் உள்ளிட்ட ஐந்து லோக சிலைகள் திருடப்பட்டதாக வாசு என்பவர் அளித்த புகார் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் போலீசார் அமெரிக்காவின் போன்ஹோம்ஸ் இல்லத்தில் 16 கோடிக்கு மேல் விற்பனை செய்ய திட்டமிட்ட 50 சென்டிமீட்டர் உயரம் கொண்ட பார்வதி சிலையை கண்டுபிடித்தனர்.
இந்த சிலையை விரைவில் மீட்டு நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் வைக்கப்படும் என்றும் திருடு போன மற்றும் நான்கு சிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
