Kathir News
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சி தேர்தல் : தி.மு.க வேட்பாளர் வாக்காளர்களுக்கு வெள்ளி முலாம் பூசிய கொலுசு ! கொலுசு வெறும் 50 ருபாய் தானாம் !

உள்ளாட்சி தேர்தல் : தி.மு.க வேட்பாளர் வாக்காளர்களுக்கு வெள்ளி முலாம் பூசிய கொலுசு ! கொலுசு வெறும் 50 ருபாய் தானாம் !
X

DhivakarBy : Dhivakar

  |  10 Oct 2021 8:10 AM IST

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வெள்ளி முலாம் பூசிய கொலுசுகளை திமுகவினர் வழங்கிவுள்ளது நாமக்கல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி 6வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில்,

அதிமுக சார்பில் அக்கரைப்பட்டி கண்ணன் மற்றும் தி.மு.க சார்பில் துரைசாமி கடுமையான போட்டி கண்டனர்.

இந்நிலையில் திமுக இத்தேர்தலில் வெற்றி பெற வெள்ளி முலாம் பூசிய கொலுசுகளை வாக்காளர்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

"வெண்ணந்தூர் ஒன்றியம் தொகுதியில் அதிமுக வலுவாக இருந்து வருகிறது. அந்த நிலையில் திமுகவினர் வாக்காளர்களுக்கு வெள்ளிக்கொலுசு அளிப்பது போல் அளித்துள்ளனர். ஆனால் அது வெள்ளிக் கொலுசு அல்ல அது வெள்ளி முலாம் பூசிய சாதாரண கொலுசு மட்டுமே. அதன் விலை ருபாய் 50 மட்டுமே, இப்படி பொய்யான வார்த்தைகளைக் கூறி வாக்காளர்களை ஏமாற்றி வருகின்றனர்" என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

தேர்தலில் வெற்றி பெற தி.மு.க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும்.

Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News