Begin typing your search above and press return to search.
கேரளா சென்று திரும்பும் மக்களுக்கு இன்று முதல் கொரோனா சான்று!
இன்று முதல் கேரளா சென்று திரும்பும் உள்ளூர் மக்களும் கட்டாயமாக கொரோனா பரிசோதனைச் சான்று வைத்திருக்க வேண்டும் என்று கூடலூர் வருவாய் கோட்டாச்சியர் கூறியுள்ளார்.

By :
இன்று முதல் கேரளா சென்று திரும்பும் உள்ளூர் மக்களும் கட்டாயமாக கொரோனா பரிசோதனைச் சான்று வைத்திருக்க வேண்டும் என்று கூடலூர் வருவாய் கோட்டாச்சியர் கூறியுள்ளார்.
கேராளவில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் உயர்ந்து வரும் நிலையில், எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவுக்கு சென்று தமிழகம் திரும்புவோர்கள் கொரோனா பரிசோதனைச்சான்று மற்றும் இபாஸ் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளா சென்று திரும்பும் மக்கள் கட்டாயம் கொரோனா சான்று வைத்திருக்க வேண்டும் என்று கூடலூர் வருவாய் கோட்டாச்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Source, Image Courtesy: Puthiyathalamurai
Next Story