'புழுதி பறக்கும் பாரு' - கடலூர்-சிதம்பரம் சாலை அவஸ்தைகள், கோபத்தில் மக்கள்
கடலூரில் மோசமான சாலைகள் இருப்பதால் மக்கள் அதிகமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

By : Mohan Raj
கடலூரில் மோசமான சாலைகள் இருப்பதால் மக்கள் அதிகமாக அவதிப்பட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பிராந்திய தேசிய நெடுஞ்சாலையாக கடலூர்-சிதம்பரம் சாலை உள்ளது. இதன் வழியாக மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினம் ஆயிரக்கணக்கான பேருந்து, கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் சிதம்பரம் வரையில் நான்கு வழிச்சாலை பணி நடப்பதால் சாலைகள் முறையாக போடப்படவில்லை. இதனால் கடலூரில் இருந்து சிதம்பரம் வரையில் கரடு முரடாகவும் பல இடங்களில் சாலையை இல்லாமல் பள்ளமாக மாறி உள்ளது. மேடு பள்ளங்களில் வாகனங்கள் செல்லும்போது சேதமடைவதும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லவோர் விபத்துக்குள்ளாவதும், உயிரிழப்புகளும் அடிக்கடி நடக்கிறது.
மேலும் தற்பொழுது புழுதி அதிகமாக பரப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். தொண்டை எரிச்சல், இருமல் மற்றும் சுவாச கோளாறு பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மாவட்டத்தின் பிரதான சாதையான சிதம்பரம்-கடலூர் சாலையை மக்கள் பாதிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
