Kathir News
Begin typing your search above and press return to search.

பக்தர்களிடம் காசை பிடுங்கும் அறநிலையத்துறை - உடுமலை ஆல்கொண்டமால் கோவில் பக்தர்கள் விடுக்கும் கோரிக்கை!

பக்தர்களிடம் காசை பிடுங்கும் அறநிலையத்துறை - உடுமலை ஆல்கொண்டமால் கோவில் பக்தர்கள் விடுக்கும் கோரிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 May 2022 11:27 AM GMT

ஆல் கொண்ட மால் கோயில் என்பது திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் இராமசந்திராபுரம் - இலுப்பநகரம் ஆகிய ஊருக்கு அருகில் உள்ள ஒரு கண்ணன் கோயிலாகும்.

உடுமலை வட்டாரத்தில் பொங்கலன்று போடப்படும் கன்றுகுட்டியானது மாலகோயிலுக்கு சொந்தம் என்று கருதுகின்றனர். அந்தக் கன்றுக் குட்டியை வளர்த்து ஒரு ஆண்டோ அல்லது இரண்டு ஆண்டோ கழித்து கோயிலுக்கு கொண்டுவந்து விட்டுவிடுவர்.

மேலும் இந்த காளைகளை கோயிலுக்கு கொண்டுவந்து விடுவதற்கு முன்பு அதன் காலில் சலங்கை கட்டி அதை ஆடப்பழக்கும் வழக்கம் இருந்தது. கோயிலுக்கு காணிக்கையாக வரும் மாடுகளை பொங்கல் விழா முடிந்த பின்னர் ஏலம் விடுவதுண்டு.

கன்றுக்குட்டியை தானம் வழங்கும் பக்தர்களிடம், ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண முறையால், பாதிக்கப்படும் பக்தர்கள், கன்றுகளை விலைக்கு விற்று, அதில் கிடைக்கும் தொகையை கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர்.

ஆண்டுதோறும் சராசரியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கால்நடைகள் தானமாக வழங்கப்படுகின்றன. ஹிந்து அறநிலையத்துறையினர் கோவில் அருகில், கோசாலையை துவக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தானமாக வழங்கப்படும் கால்நடைகளை முறையாக பராமரிக்க தேவையான தீவனப்புல், தண்ணீர் ஆகியவற்றை கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், எளிதாக பெற முடியும். கால்நடைகளுக்கென பிரத்யேகமாக உள்ள கோவிலில், இதை அமைப்பது அக்கோவிலின் சிறப்பை மேலும் அதிகரிக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Inputs From: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News