மதனின் பேச்சு ஆரம்பமே கேட்க முடியாத வகையில் மோசமாக உள்ளது: சென்னை உயர்நீதிமன்றம்.!
‘டாக்சி மதன் 18+’ என்ற யூடியூப் சேனலில் மிகவும் ஆபாச பேச்சுகளுடன் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை நேரலை செய்து வந்த மதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

By : Thangavelu
'டாக்சி மதன் 18+' என்ற யூடியூப் சேனலில் மிகவும் ஆபாச பேச்சுகளுடன் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை நேரலை செய்து வந்த மதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே நேற்று (ஜூன் 16ம் தேதி) மதனின் மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தலைமறைவான மதனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் தேடுவதை அறிந்த மதன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பாக வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதி தண்டாயுதபாணி விசாரித்த போது, மதனுக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது மதனின் வழக்கறிஞர் தொழில் போட்டியாளர்கள் அளித்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். எனவே பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் தரவில்லை என கூறினர். இதனையடுத்து பேசிய நீதிபதி, மதன் பேசிய வீடியோவில் ஆரம்பமே
இதையடுத்து பேசிய நீதிபதி, மதனின் வீடியோவில் ஆரம்பமே கேட்க முடியாத வகையில் மோசமாக உள்ளது. முன்ஜாமின் கேட்ட மதனின் பேச்சை கேட்டுவிட்டு வந்து வழக்கறிஞர் வாதிட வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கில் தற்போது சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. மதன் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
