மடப்புரம் காளி அம்மனின் மூக்குத்தி திருட்டு: அதிர்ச்சியில் பக்தர்கள்?
மடப்புரம் காளி அம்மன் கோவிலில் அம்மனுடைய விலைமதிப்பு மிக்க மூக்குத்தி திருட்டு.
By : Bharathi Latha
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்திருக்கும் மடப்புரம் காளியம்மன் கோவிலில் மூக்குத்தி திருட்டு போயிருக்கும் சம்பவம் தற்பொழுது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்து இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் வந்த சுவாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது. அம்மன் சிலையில் இருந்த தங்க மூக்குத்தி திருட்டு போயிருக்கும் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில் அமைந்து இருக்கிறது. குறிப்பாக வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் பெண் பக்தர்கள் கூட்டம் இந்த கோவிலில் அலைமோதும். ஆடி வெள்ளிக்கிழமை அன்று தமிழக போக்குவரத்து துறை சார்பில் தனியாக பேருந்துகளும் இந்த கோவிலுக்கு விடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கூட்டம் அலைமோதும் இந்த கோவிலின் அம்மன் சிலை தங்க மூக்குத்தி திருட்டுப் போய் இருக்கிறது.
பிரம்மாண்டமான குதிரை வாகனத்தில் அக்ரோஷமான ரூபத்துடன் காட்சி தரும் பத்ரகாளி அம்மன் சிலையின் 42 கிராம் மதிப்புள்ள இரண்டு கற்கள் பொறிக்கப்பட்ட தங்க மூக்குத்தி தற்பொழுது காணாமல் போய் இருக்கிறது. அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கோவில் சுவர் மீது ஏறி வளாகத்திற்குள் நுழைந்து மூக்குத்தியை திருடி சென்று இருப்பது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
Input & Image courtesy: News 18