ஸ்ரீரங்கம் பெரியார் சிலை முன்பு இதிகாச எரிப்பு போராட்டமா? ஐகோர்ட் உத்தரவு என்ன?
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள பெரியார் சிலை முன்பாக இதிகாச எரிப்பு போராட்டமா?
By : Bharathi Latha
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை முன்பு இதிகாச எரிப்பு போராட்டம் என செய்தி பரவுவதால் ரங்கநாதர் கோவிலுக்கும், கோவில் பக்தர்களுக்கும் உரிய போல பாதுகாப்பு வழங்கும் படி மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த மனுவில் வருகின்ற 17ஆம் தேதி அதாவது பெரியார் பிறந்த நாளில் முன்னிட்டு மனு ஸ்மிருதி வேதங்கள் உள்ளிட்ட இதிகாச நூல்களை எரிக்கும் போராட்டம் நடத்த போவதாக மக்கள் அதிகாரம் மற்றும் தேசிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் சமூகவலைத்தளங்களில் செய்திகளை வெளியிட்டு உள்ளார்கள்.
இந்த தகவலினால் ரிக், யஜுர், சாமம், அதர்வனும் ஆகிய நான்கு வேதங்களில் நம்பிக்கை கொண்ட இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் வேத நூல்களை தவறாக கூறும் வகையில், அமைதியின்மையை ஏற்படுத்தும் இந்த செயல் நடைபெற உள்ளது. எனவே இந்த போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்படி இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாதுகாப்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் எந்த ஒரு கூட்டம் போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காது. மீறி போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை எடுத்து நீதிபதிகள் இந்த தீர்மானத்தை பதிவு செய்து கொள்கிறோம். சம்பந்தப்பட்ட பகுதியில் சட்ட ஒழுங்கையும் பொது அமைதியும் பாதுகாக்க அதிகாரிகளுக்கு உட்பட விடுகிறோம். ரங்கநாதர் கோவிலுக்கு பக்தர்கள் இடையூறு ஏற்படுத்தாத பகுதியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: The Hindu