திமுக அரசின் மீதான அதிருப்தியை வெளிபடுத்திய மதுரை ஆதீனம் !
By : TamilVani B
விநாயகர் சதுர்த்தியை விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமகுடியில் நடைபெற்ற சிதம்பரனார் பிறந்தநாள் விழாவில் மதுரை ஆதீனம் ஸ்ரீலாஸ்ரீ ஹரி ஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டார். இந்த விழாவை அடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், " விநாயகர் சதுர்த்தி விழா ஒரு மதம் சார்ந்த பண்டிக்கை மட்டுமல்ல அது சுகந்திர போராட்டதிற்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை பயன்படுத்தினர்.
எனவே விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிறது". மேலும் அவர் பேசுகையில், பிரதமர் மோடியின் அரசால் தான் இந்தியா பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, திமுக அரசு இந்து மத உரிமைகளில் தலையீடுவதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றால் அது அனைத்து மத்திற்கும் பொதுவானதாக்இருக்க வேண்டும் ஆனால் இந்த அரசு இந்து மதத்தின் மீது மட்டும் புகுத்துவது தவறு எனவும் தெரிவித்தார். திமுகவின் 100 நாள் ஆட்சியை பற்றி அவர் கருத்து எதுவும் கூறவில்லை.