Kathir News
Begin typing your search above and press return to search.

பட்டினப் பிரவேசத்தை உலகறிய செய்த வீரமணிக்கு நன்றி - மதுரை ஆதீனம்!

பட்டினப் பிரவேசத்தை உலகறிய செய்த வீரமணிக்கு நன்றி - மதுரை ஆதீனம்!

ThangaveluBy : Thangavelu

  |  9 May 2022 10:37 AM GMT

யாருக்குமே தெரியாமல் இருந்த பட்டினப்பிரவேசத்தை உலகமே பார்க்கும்படி செய்த திராவிட கழக தலைவர் வீரமணிக்கு நன்றி தெரிவித்துள்ளார் மதுரை ஆதீனம், மடங்களில் இந்து அமைப்பு மற்றும் பா.ஜ.க. தலையீடு இருப்பதாக யார் சொன்னாலும் தனக்கு கவலையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தி.மு.க. அரசு நீக்கியுள்ள நிலையில், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் மடத்தில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் பட்டின பிரவேசம் என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில், அதனை ஒரு சர்ச்சையை உண்டு செய்து தற்போது உலகறியச் செய்துள்ள தி.க. தலைவர் வீரமணிக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News