கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: அனைவருக்கும் சாகும் வரை சிறை தண்டனை!
By : Thangavelu
மதுரையில் உள்ள தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் தொடர்புடைய யுவராஜூ சாகும் வரையும் ஆயுள் தண்டை அளிக்கப்பட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி ஆணவக்படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ், ஜோதிமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.
வழக்கு நடந்து கொண்டிருந்தபோது ஜோதிமணி இறந்துவிட்டார். இந்த வழக்கில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி யுவராஜூக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே போன்று அருள் செந்தில், சங்கர், செல்வக்குமார், தங்கதுரை, சுரேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து 10 குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அதன்படி யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், அருண் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், குமார் என்பவருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், சதீஸ்குமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், ரகு 2 ஆயுள் தண்டனையும், ரஞ்சித் 2 ஆயுள் தண்டனையும், செல்வராஜ் 2 ஆயுள் தண்டனையும், சந்திரசேகர் ஆயுள் தண்டனையும், பிரவுவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ஐநது ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஐந்து ஆயிரம் அபராதம், கிரிதருக்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் ஐந்து வருட கடுங்காவல் மற்றும் ஐந்து ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Source, Image Courtesy: Vikatan