Kathir News
Begin typing your search above and press return to search.

1ம் வகுப்பு முதல் டிகிரி வரை தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு.!

கடந்த 2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1ம் வகுப்பு முதல் டிகிரி வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

1ம் வகுப்பு  முதல் டிகிரி வரை தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 July 2021 4:47 PM IST

கடந்த 2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1ம் வகுப்பு முதல் டிகிரி வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குரூர் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவு நடைமுறைப்படுத்தினால் அதிகாரிகள் நியமனம் செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறும்போது, கடந்த ஜனவரி 2020ம் ஆண்டு குரூப் 1 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மீண்டும் நீதிமன்ற உத்தரவின்படி முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு வாயப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.


இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆங்கிலவழியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, டிகிரி வரை மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்யலாமா? என்று கேள்விகளை எழுப்பினர்.

மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அல்லது வேறு சில பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை பெற்று முறைகேடாக வேலைக்கு சேர்கின்றனர். எனவே அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

2020ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News