Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக கோவில்களில் திருப்பதியில் இருப்பது போல் கட்டுப்பாடுகள் தேவை: நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தமிழக கோவில்களில் திருப்பதியில் உள்ளதை போன்று கட்டுப்பாடுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இந்து சமய அறநிலைதுறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்.

தமிழக கோவில்களில் திருப்பதியில் இருப்பது போல் கட்டுப்பாடுகள் தேவை: நீதிமன்றம் அறிவுறுத்தல்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Oct 2022 9:35 AM GMT

பக்தர்களின் கோரிக்கை:

தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்கள் திருப்பதியில் இருப்பதைப் போன்று கட்டுப்பாடுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மதுரை நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க செயலாளர் சித்திரங்கநாதன் தாக்கல் செய்த மனுவில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் திருச்செந்தூர் கோவிலில் சஷ்டி திருவிழா கடந்த இரண்டு 25ஆம் தேதி தொடங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 30ஆம் தேதி சூரசம்ஹர நிகழ்ச்சி நடக்கிறது. சஷ்டியை ஒட்டி திருச்செந்தூர் கோவிலில் உள்ள பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பது வழக்கம்.


கடவுள் அனைவருக்கும் சமமானவர்:

இந்த ஆண்டு அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. காலம், காலமாக இந்த பழக்கத்தை மாற்றுவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் உள்பிரகாரத்தில் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு இடம் ஒதுக்கி தர உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் விசாரணைக்கு வந்த பொழுது திருப்பதியில் இருப்பதைப் போல கோவில்களுக்கு உள்ளே சென்று விரதம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் சத்தியமா? இந்த முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.


கோவில்கள் வசதி படைத்தவர்களுக்காக கிடையாது கடவுள் அனைவருக்கும் சமமானவர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. எனவே கோபில் நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியானது தான் என்று கூறி இருக்கிறார்.


திருப்பதியில் உள்ளதை போன்று கட்டுப்பாடு:

மேலும் கோவிலில் உள்ளே சென்று உட்காருவதால் மட்டும் அனைத்தும் சரியாகிவிடாது. உண்மையான பக்தி இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்று கருத்து விடுத்துள்ளார். திருப்பதியில் உள்ள நடைமுறைகளைப் போல திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான கோவில்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைகளுக்கு கொண்டுவர வேண்டும். குறிப்பாக முக்கிய கோவில்கள் பிரகாரங்களில் யாகம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு அறநிலையத்துறை பரிந்துரைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News