இனி கோவில் பெயரில் யாரும் தனியார் இணையதளம் இயக்க முடியாது - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு என்ன?
கோவில் பெயரில் இயங்கும் தனியார் இணையதளங்களை முடக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.
By : Bharathi Latha
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தர்மபுரம் ஆதீனம். ஆதீனம் மிகவும் பழமையானது. இந்த ஆதீனத்துக்கு சொந்தமானது மயிலாடுதுறையில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் இங்கு சுயம்பு மூர்த்தியாக சிவன் அருள் பாவிக்கிறார். 60 ஆண்டு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டினர் அதிக அளவில் இங்கு வந்து திருமண நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இதற்காக கோவில் அணுகும் பலர் தவறான தனியார் வலைதளத்தை தொடர்பு கொள்கிறார்கள்.
இதுபோன்று நிகழ்ச்சிகளுக்கு கோவில் நிர்வாகம் தரப்பில் குறைந்த தொகை மட்டுமே வசூலிக்கப்படுகின்றது. ஆனால் ஏராளமான பக்தர்களிடம் தனியார் இணைதளங்களில் பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபாயை வசூலிக்கின்றார்கள். இதனால் பக்தர்கள் விரக்தி அடைந்த நிலை உள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் வலைத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு ஒன்று தாக்கல் செய்திருந்தது.
ஆனால் அதற்கு எந்த பயனும் இல்லை. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் கோவிலின் பெயரில் செயல்படும் தனியார் இணைதளங்களை முடக்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை இனி கமிஷனர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்ட விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Thanthi News