தடுப்பூசி கட்டாயம் இல்லை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் தகவல்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை முதல் (டிசம்பர் 13) 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், பக்தர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் எடுத்து வரவேண்டும் என்ற உத்தரவை கோயில் நிர்வாகம் நேற்று பிறப்பித்தது.
By : Thangavelu

இந்த அறிவிப்புக்கு பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை கூடவே எடுத்து வருவது என்பது சாத்தியமில்லாதது எனவும் பல்வேறு தரப்பினர், மீண்டும் கோயில் நிர்வாகம் வெளியிட்ட உத்தரவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக, தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே என்ற அனுமதி உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையம் கூறியுள்ளார். அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
Source: Daily Thanthi
Image Courtesy: Deccan Chronicle