ஒடிசாவில் இருந்து மதுரை வந்த 4வது ஆக்சிஜன் ரயில்.!
தென்தமிழகத்திற்கான 4வது ஆக்சிஜன் சரக்கு ரயில் ஒடிசாவில் இருந்து மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
By : Thangavelu
தென்தமிழகத்திற்கான 4வது ஆக்சிஜன் சரக்கு ரயில் ஒடிசாவில் இருந்து மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ளதால், ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்தது. இதனை சரிசெய்யும் விதமாக மத்திய அரசு சரக்கு ரயில் மற்றும் ராணுவ விமானங்கள் மூலமாக ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை எடுத்து வந்து சப்ளை செய்து வருகிறது.
அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து 31.02 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் இன்று மதுரை கூடல்நகர் வந்து சேர்ந்தது. இதற்காக டேங்கர் லாரிகள் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து இறங்கும் வகையில் சாய்வுதளப் பாதை புதிதாக கூடல் நகரில் அமைக்கப்பட்டிருந்தது. டேங்கர் லாரிகள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.