மதுரையில் தேவர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.. வன்முறையில் 10 பேர் காயம்.!
மதுரை மாவட்டம், மேலூர் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மோதலில், போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது வெள்ளாளப்பட்டி புதூர். அங்கு புதியதாக தேவர் சிலையை வைத்துள்ளனர். இந்த சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் சிலர் போராட்டம் நடத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு சிலர் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் காவல் ஆய்வாளர் சார்லஸ், இரண்டு சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 3 காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் சேதப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் மேலூர் பகுதி முழுவதும் பரபரபப்பான சூழல் நிலவி வருகிறது.