மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம் - கண்டுகொள்ளுமா சுகாதாரத்துறை?
தரையில் படுத்து வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மதுரை ராஜாஜி மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது.

By : Mohan Raj
தரையில் படுத்து வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மதுரை ராஜாஜி மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது.
தென் தமிழக மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவ தேவைகளை தினமும் பூர்த்தி செய்ய வேண்டிய இடம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, சமீபகாலமாக இம்மருத்துவமனையில் குறிப்பிட்ட சில வார்டுகளில் நோயாளிகளுக்கு பற்றாக்குறை படுக்கை உள்ளதாகவும், அதனால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் நிலவுவதுமாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு தகவல் கிடைத்ததில் கள ஆய்வு செய்யப்பட்டது.
அங்கு அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டதில் ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய்த்துறை இயங்கி வரும் 90-வது வார்டில் சில நோயாளிகளுக்கு வார்டின் நடைபாதையிலும், உதவியாளர்கள் அமரும் இருக்கையிலும் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படடுவது தெரியவந்தது.
புற்றுநோய் வாடின் இரு புறமுள்ள நடைபாதையில் நோயாளிகளின் உடன் வந்திருந்த உதவியாளர்கள் பலரும் அங்குமிங்கும் அமைந்திருக்க வலப்புறம் சுவர் ஓரம் தரையில் ஒரு பெண், ஒரு ஆண் நோயாளிக்கு தரையில் படுக்க வைக்க சிகிச்சை அளிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி தரையில் படுக்க வைத்திருப்பவர்களுக்கு ஒரு மெத்தை விரிப்போ, போர்வையோ இன்றி வெறும் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுவது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அந்த சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மற்றும் அவர்களுடன் உடன் வருபவர்கள் கூறுகையில், 'எங்களுக்கு வேறு வழியில்லை அதனால் இங்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக' தெரிவித்தனர்.
தென் தமிழகத்தின் முக்கிய மருத்துவமனையாக இருக்கும் ராஜாஜி மருத்துவமனையை தி.மு.க அரசு கவனிக்குமா என்று கேள்வியும், எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
