Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை: 300 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்த நபர் கைது.!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட சிந்தாமணியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

மதுரை: 300 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்த நபர் கைது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  4 July 2021 11:43 AM IST

மதுரையில் 300 மூட்டை ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட சிந்தாமணியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வாகனங்களை போலீசார் சோதனையிட்ட பின்னரே செல்வதற்கு அனுமதித்தனர். அதன்படி ஒரு லாரியை மடக்கி சோதனை செய்ததில் 300 மூட்டைகளில் சுமார் 18 டன் எடை அளவுக்கு ரேஷன் அரிசி மற்றும் நெல் மூட்டைகள் விருதுநகரில் இருந்து மதுரைக்கு சட்ட விரோதமாக கடத்தியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அரிசி கடத்தி வந்த லாரி ஓட்டுநர் சண்முக சுந்தரத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது விசாரணைக்கு பின்னர் தெரியவரலாம் என கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News