மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில்? மீட்க அறநிலையத்துறைக்கு உத்தரவு!
By : Kathir Webdesk
மதுரை ஆதினத்திற்குச் சொந்தமான நிலத்தினை மீட்க வேண்டி, சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மதுரை ஆதின மடத்துக்குச் சொந்தமான 1191 ஏக்கர் நிலங்களை புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருடங்களுக்கு பவர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த பவர் ஒப்பந்ததின்படி 2018 ஆம் ஆண்டு பத்திரப் பதிவும் நடந்துள்ளது.
ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது என்பது சட்ட விரோதம். எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, நிலத்தினை மீட்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சட்டத்தை மீறி பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுப்பதாகவும், அவர்கள் பண பலமிக்கவர்களாகவும் உள்ளனர் ஆதீனம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தீர்ப்பில் குறிப்பிட்டிருந்ததாவது, இந்து அறநிலையத்துறையானது மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்டு மதுரை ஆதீன மடத்திடம் ஒப்படைக்கவேண்டும் எனவும், தேவைப்படும் ஏற்படும்பட்சத்தில் காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.
Input From: ABP