Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரையில் 8 மாத கர்ப்பிணி பெண் மருத்துவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு.. டி.டி.வி. தினகரன் இரங்கல்.!

மதுரை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சண்முகப்பிரியா என்ற பெண் மருத்துவர் பணியாற்றி வந்தார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனாலும் கொரோனா தொற்றுக்கு இடையில் அவர் பொதுமக்களுக்காக பணியாற்றி வந்தார்.

மதுரையில் 8 மாத கர்ப்பிணி பெண் மருத்துவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு.. டி.டி.வி. தினகரன் இரங்கல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 May 2021 9:48 AM IST

மதுரை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சண்முகப்பிரியா என்ற பெண் மருத்துவர் பணியாற்றி வந்தார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனாலும் கொரோனா தொற்றுக்கு இடையில் அவர் பொதுமக்களுக்காக பணியாற்றி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சண்முகப்பிரியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஏற்கனவே கர்ப்பிணியாக இருந்ததாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், கொரோனா தடுப்புப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்த செய்தி பெரும் வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News