மதுரையில் பெண் எஸ்.ஐ., கொரோனா தொற்றால் உயிரிழப்பு.!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, மகபூப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டத்தில் உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து குடும்பத்தினர் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரியை மதுரையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்க, ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது தனியார் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
