அனைத்து சிவாலயங்களிலும் ஆன்மீக நிகழ்ச்சி ஏற்பாடு: என்ன சிறப்பு தெரியுமா?
மகா சிவராத்திரி முன்னிட்டு சனிக்கிழமை அனைத்து சிவ ஆலயங்களிலும் ஆன்மீக நிகழ்ச்சி.
By : Bharathi Latha
அனைத்து சிவன் கோவில்களிலும் சனிக்கிழமை நடைபெறும் மகா சிவராத்திரி பண்டிகையை ஒட்டி பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலைத்துறை கமிஷனர் முரளிதரன் தெரிவித்து இருக்கிறார். மேலும் இது குறித்து மண்டல இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றரிக்கையில் துறை ஆளுமைகளுக்கு உட்பட்ட அனைத்து சிவ ஆலயங்களிலும் 18ம் தேதி மாலை முதல் 19ஆம் தேதி காலை வரை மகாசிவராத்திரி திருவிழா நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
அதை எடுத்த பக்தர்களையும் மனங்களை குளிர் வைக்கும் படி நம்முடைய பாரம்பரிய மற்றும் கலாச்சார ஆன்மீகம் மற்றும் சமய நிகழ்ச்சிகளை நடத்த கோவில் நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கோவில் கோபுரங்கள் சுவர்கள் போன்றவற்றில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மின் அலங்கார செய்யவும், பக்தர்கள் சிரமமும் இன்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வரிசை தடுப்பு வசதிகள், காவல் துறை பாதுகாப்பு, மருத்துவம் முகாம்கள், சுகாதார வசதி, குடிநீர் வசதி, வாகனம் நிறுத்தம் போன்றவைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தி அவர்கள் ஒத்துழைப்புடன் மகா சிவராத்திரி திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அரசின் வழிமுறை நெறிபாடுகளை கடைப்பிடித்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தனியிடம் ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், ஒலிபெருக்கியின் அளவு குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar